திருவாரூரில் சுப்பிரமணியசாமி உருவபொம்மையை எரித்து போராட்டம்

திருவாரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுப்பிர மணியசாமி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர்,
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாவா முன்னிலை வகித்தார். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் கலந்து கொண்டு சுப்பிரமணியசாமியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story