மாளந்தூர், நொச்சிலி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

மாளந்தூர், நொச்சிலி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மாளந்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். இதில் மண்டல துணை தாசில்தார் கதிர்வேல், தலைமையிடத்து எழுத்தர் ரவி, வருவாய் ஆய்வாளர் காயத்திரி, கிராம நிர்வாக அதிகாரி ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 52 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தாசில்தார் கிருபாஉஷா பெற்றுகொண்டார். இதில், 8 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 44 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 8 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா வழங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் ரவி, சுரேஷ், பிரபு ஆகியோர் வரவேற்றனர். முடிவில், ஷேக்தாவூத் நன்றி கூறினார்.
நொச்சிலி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நொச்சிலி ஊராட்சியில் அம்மா திட்டமுகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், பட்டாமாற்றம், புதிய ஸ்மார்ட் கார்டு, வங்கி கடன், அரசு நலத்திட்ட உதவிகள் கோரி 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன..முகாம் முடிவில் திருத்தணி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற மதிப்பீட்டு குழுத்தலைவருமான பி.எம்.நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணம நாயுடு, வருவாய் ஆய்வாளர் அஜய்பாபு, ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன், கிராம நிர்வாக அதிகாரி சம்பத், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அற்புதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமரம்பேடு
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த அமரம்பேடு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்துகொன்டு ரேஷன் கார்டுகள் வேண்டியும், வீட்டு மனைபட்டா , முதியோர் உதவித்தொகை வேண்டியும் மனுக்களை அளித்தார்கள். மொத்தம் 36 பேரிடம்் மனுக்கள் பெறப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொன்டு 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
அதில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன், கிராம நிர்வாக அதிகாரி லட்சுமி,் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story