பெங்களூரு பம்பு பஜாரில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா இல.கணேசன், எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

பெங்களூரு பம்பு பஜாரில் நேற்று 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு பம்பு பஜாரில் நேற்று 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த இல.கணேசன் எம்.பி., தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு கலாசிபாளையத்தில் உள்ள பம்புபஜாரில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கவுன்சிலர் பிரதீபா தனராஜ், அவருடைய கணவரும்-பெங்களூரு நகர பிரிவு பா.ஜனதா தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான தனராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொள்ள நேற்று காலை 6 மணிக்கே பெண்கள் ஆர்வமாக பம்பு பஜாருக்கு வந்தனர். அவர்களை கவுன்சிலர் பிரதீபா தனராஜ் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட சுமார் 3 ஆயிரம் பெண்களுக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பொங்கல் இடுவதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
‘பொங்கலோ... பொங்கல்’
இதையடுத்து அனைவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது அவர்கள் ‘பொங்கலோ... பொங்கல்’ என மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர்கள் தயாரித்த பொங்கல் அங்கு இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. கரும்புகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, மத்திய மந்திரி அனந்தகுமார் குத்துவிளக்கேற்றியும், ஷோபா எம்.பி. பொங்கல் வைக்க இருந்த பெண் ஒருவருக்கு அடுப்பில் தீப்பற்ற வைத்து கொடுத்ததன் மூலமாகவும் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த இல.கணேசன் எம்.பி., பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, பி.சி.மோகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மரியாதை
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முடிவில் அவர் நன்றி கூறினார். இதுகுறித்து கவுன்சிலர் பிரதீபா தனராஜ் கூறுகையில், ‘தமிழர்களும், கன்னடர்களும் வாழும் பெங்களூருவில் இருவரையும் இணைத்து பொங்கல் விழா கொண்டாடியது மகிழ்ச்சி. இதுபோன்ற விழாவை தொடர்ந்து நடத்த முடிவு எடுத்துள்ளேன்‘ என்றார்.
விழா குறித்து தனராஜ் கூறுகையில், ‘தமிழனாய் பிறந்தேன். தமிழரின் முதல் பண்டிகையான பொங்கல் விழாவை கர்நாடக வாழ் தமிழராக நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டேன். பொங்கல் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது‘ என்றார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில், கர்நாடக பா.ஜனதா செயலாளர் ஜெயதேவ், பெங்களூரு மாநகர பா.ஜனதா தலைவர் சதாசிவா, பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத்தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் ராமசுப்பிரமணியன், இந்து நாடார் அசோசியேசன் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், கர்நாடக தேவர் சங்க தலைவர் ஞானகுரு, பொதுச்செயலாளர் மணிகண்டன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story