அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ரூ.18 லட்சத்து 70 ஆயிரம்


அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ரூ.18 லட்சத்து 70 ஆயிரம்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் கல்பாக்கம் அணு மின்நிலையம் வழங்கியது.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அணு மின்நிலையம் சுற்றுப்புற கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கல்பாக்கம் அடுத்த குன்னப்பட்டு ஊராட்சி பஞ்சதிருத்தி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்காக ரூ.18 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அணுமின்நிலைய இயக்குனர் சத்யநாராயணா வழங்கினார்

இதேபோல நல்லாத்தூர் ஊராட்சி பனங்காட்டுசேரி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆழ்துளை கிணறு, மோட்டார் அறை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.9½ லட்சத்துக்கான காசோலையையும் கலெக்டரிடம் அணு மின்நிலைய இயக்குனர் சத்யநாராயணா வழங்கினார். இதில் கல்பாக்கம் அணு மின்நிலைய முதன்மை என்ஜினீயரும், கிராம நலக்குழுத்தலைவருமான சுரேஷ் கலந்து கொண்டார்.


Next Story