ஆம்புலன்ஸ் வராததால் சிகிச்சைக்கு தாமதம்: வலிப்பு நோயால் பெண் பரிதாப சாவு


ஆம்புலன்ஸ் வராததால் சிகிச்சைக்கு தாமதம்: வலிப்பு நோயால் பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 11 Jan 2018 5:52 AM IST (Updated: 11 Jan 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

வலிப்பு நோயால் அவதிப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் சிகிச்சை கிடைக்காமல் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. பொதுமக்களுடன் மறிய லில் ஈடுபட்டார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி சேனியர் தெருவை சேர்ந்தவர் சேவியர். அந்த பகுதியில் வாடகை சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜாக்குலின் நிர்மலா (வயது 49). இவருக்கு நேற்று காலை திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்ததும் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் வேனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. கோட்டுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டரிடம் ஜாக்குலின் நிர்மலாவின் நிலைமையை எடுத்துக்கூறி வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படு கிறது. ஆனால் டாக்டர் இதற்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியில்லா மல் வாடகை காரில் ஜாக்கு லின் நிர்மலாவை கோட்டுச் சேரி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த டாக்டர்கள் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உடேன ஜாக்குலின் நிர் மலாவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அப்போது ஜாக்குலின் நிர்மலா குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டினார்கள்.

இந்த சம்பவம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்காவிடம் தெரிவித்த னர். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஜாக்கு லின் நிர்மலாவின் சாவு குறித்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மதியம் 2 மணி அளவில் காரைக்கால் அரசு மருத்துவமனை அருகில் காமராஜர் சாலையில் பொது மக்களுடன் சந்திரபிரியங்கா திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டார். கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜோசப் குணாளன், காரைக் கால் மாவட்ட த.மு.மு.க. தலைவர் அப்துல் ரகீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் திரு-பட்டினம் தொகுதி செயலாளர் விடுதலைகனல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்த காரைக்கால் மாவட்ட சார்பு கலெக்டர் விக்ரந்த்ராஜா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோர் அங்கு வந்து சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உரிய விசாரணை செய்து தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் 108 ஆம்புலன்ஸ் களுக்கு அரசிடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் சார்பு கலெக்டர் விக்ரந்த்ராஜா உறுதி அளித்தார். அதை ஏற்று சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story