திருமணமான 1½ ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை, ஆர்.டி.ஓ. விசாரணை


திருமணமான 1½ ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை, ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 14 Jan 2018 3:30 AM IST (Updated: 14 Jan 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 1½ஆண்டில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கென்னிமார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகள் நாகஜோதி(வயது20). இவருக்கும் இந்த கிராமத்தின் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாகஜோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சம்பவத்தன்று நாகஜோதி அவருடைய தாய் வீட்டின் அருகே காட்டு பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் மற்றும் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான 1½ஆண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து சிவகங்கை ஆர்.டி.ஓ. சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story