சென்னையை அடுத்த பம்மலில் பூட்டிய அறைக்குள் கழுத்தை அறுத்த நிலையில் பெண் பிணம்


சென்னையை அடுத்த பம்மலில் பூட்டிய அறைக்குள் கழுத்தை அறுத்த நிலையில் பெண் பிணம்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பம்மலில் பூட்டிய அறைக்குள் கழுத்தை அறுத்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் மூங்கில் ஏரி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிப்முகமது (வயது 52). இவருடைய மனைவி சுலேகா பானு(43). இவர்களுக்கு சையதுஅலி பாத்திமா(23), சகானாபானு (21) என 2 மகள்கள் உள்ளனர்.

மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அபிப்முகமது, வீட்டின் கீழ் தளத்தில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை அபிப்முகமது கடைக்கு சென்று விட்டார். மூத்த மகள் சையது அலி பாத்திமா வெளியே சென்று இருந்தார். வீட்டில் சுலேகா பானு, இளைய மகள் சகானாபானு மட்டும் இருந்தனர்.

இந்தநிலையில் சுலேகாபானு, திடீரென வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். அவர் நீண்டநேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சகானாபானு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் பயந்து போன அவர், கீழ் தளத்துக்கு சென்று கடையில் இருந்த தந்தையிடம் தெரிவித்தார்.

உடனடியாக அபிப்முகமது மாடிக்கு சென்று அறை கதவை தட்டினார். அப்போதும் திறக்கப்படாததால் பலமாக தள்ளி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு சுலேகா பானு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அருகில் காய்கறி நறுக்கும் கத்தி கிடந்தது.

இதுபற்றி சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலோகா பானு, அறை கதவை பூட்டிக்கொண்டு கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரது கழுத்தை அறுத்துக்கொலை செய்தனரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story