உள்கட்சி தேர்தல் இன்று நடக்கிறது சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரே மீண்டும் தேர்வாகிறார்


உள்கட்சி தேர்தல் இன்று நடக்கிறது சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரே மீண்டும் தேர்வாகிறார்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:00 AM IST (Updated: 23 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல், மறைந்த தலைவர் பால் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. #mumbai #Shiv Sena

மும்பை

சிவசேனா தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல், மறைந்த தலைவர் பால் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. மும்பை ஒர்லியில் உள்ள என்.எஸ்.சி.ஐ.யில் இந்த தேர்தல் நடக்கிறது. கட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், உத்தவ் தாக்கரே மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். இதேபோல கட்சியின் துணை தலைவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேசிய நிர்வாக குழு உறுப்பினர்கள் 180 பேர் பங்கேற்று கட்சியின் நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்கள்.

அதே வேளையில், உத்தவ் தாக்கரேயின் மகனும், சிவசேனா இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரேக்கு கட்சியில் முக்கிய இடம் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

உள்கட்சி தேர்தலையொட்டி, நேற்று பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவசேனா மூத்த தலைவர்கள் மனோகர் ஜோஷி, சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story