பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா ஒத்திகை

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா ஒத்திகை நேற்று நடந்தது.
நெல்லை,

குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா வருகிற 26–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியரசு தினவிழா நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் குடியரசு தின விழா நடக்கிறது. அன்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதில் போலீசார், ஊர்காவல்படை, தேசிய மாணவர் படை மாணவ–மாணவிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ஒத்திகை நிகழ்ச்சி
இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் நேற்று காலை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இசை முழக்கத்துடன் போலீசார் அணிவகுத்து சென்றனர். உயர் அதிகாரிகள் பின்னர் போலீசார் அணிவகுத்து சென்றனர். வ.உ.சி.மைதானத்தை சுற்றி வந்து அங்குள்ள கொடிகம்பத்துக்கு மரியாதை செலுத்துவது போல் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. போலீசார், ஊர்க்காவல் படை, பெண் போலீசார், தேசிய மாணவர் படை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள்
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ–மாணவிகளின் ஒத்திகை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் இந்திய நாட்டின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆடல், பாடல்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். குடியரசு தினவிழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story