தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 2 இடங்களில் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 2 இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பொதுக்கூட்டம்
தமிழ் மொழியை பாதுகாத்திட, இந்தி திணிப்பு உத்தரவை எதிர்த்து 1938, 1942, ஆகிய ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடினர். மேலும் 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் எழுச்சி போராட்டங்கள் தி.மு.க தலைமையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தினர். தாய் மொழியை காத்திட நடைபெற்ற இப்போராட்டங்களில் மாணவர்கள் பலர் உயிர் இழந்தனர். அவர்களின் நினைவாக தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25–ந் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
2 இடங்களில்...
அதன்படி இந்த ஆண்டும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வருகிற 25–ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்செந்தூர், புதுக்கோட்டை ஆகிய 2 இடங்களில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன், அந்தியூர் சுப்பு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
திருச்செந்தூர் பொதுக்கூட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி கிழக்கு, ஆழ்வார்திருநகரி மேற்கு ஆகிய ஒன்றியங்களில் இருந்தும், பேரூராட்சிகள் மற்றும் காயல்பட்டினம் நகரில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் தூத்துக்குடி, கருங்குளம் தெற்கு, வடக்கு, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு, மேற்கு ஆகிய ஒன்றியங்களில் இருந்தும், மாநகராட்சியில் உள்ள 8 வார்டுகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story