புத்தகம் சிறந்த நண்பன்

வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது.
தலை குனிந்து என்னை படித்தால்
தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம்.
இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். வரலாறு, தொழில்நுட்பம், பொது அறிவு, கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடியும். வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ‘காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் புத்தகம் திகழும்’ என்று அறிஞர்கள் கூறுவார்கள். எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம்.
‘இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்’ என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நூலகங்களில் பல புத்தகங்கள் வாசிக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது.
உலகத்தை கைக்குள் கொண்டு வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போனில் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கைவிட வைக்கிறது. ஆனால் தேவையானதை தேடும்போது முழுமையான தகவலை புத்தகம் கொடுக்கிறது. மேலும் சிலர் தேவையான புத்தகங்களை செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் புத்தகத்தை நேரடியாக வாசிக்கும் அனுபவம் செல்போன், கணினியின் திரையில் வாசிக்கும்போது கிடைக்காது என்பதை உணர வேண்டும். எனவே, வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த நண்பனை தேர்ந்தெடுப்போம்
-தா.மு.சரோ

Related Tags :
Next Story