சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு: ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது.
மும்பை,
குஜராத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்ட்டர் எனக்கூறி மாநிலத்தின் அப்போதைய உள்துறை மந்திரியும், தற்போதைய பா.ஜனதா தலைவருமான அமித்ஷா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்து வரும் மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, சொராபுதீன் வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மும்பை பத்திரிகையாளர் அமைப்பு சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி மோகித்-தேரே, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த தடை நியாயமற்றது எனக்கூறிய நீதிபதி, இது பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் கூறினார். அரிதான வழக்குகளில் மட்டுமே, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Related Tags :
Next Story