ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 616 காளைகள் மாடுகள் முட்டித்தள்ளியதில் 22 பேர் காயம்

மணப்பாறை அருகே தீராம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டித்தள்ளியதில் 22 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் உள்ள புனித அந்தோணியார், செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்திட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதற்கான பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து தகுதியுள்ள காளைகள் மட்டும் வாடிவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தபின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் முதல் காளையாக செவலூர் மணிக்கவுண்டர் காளை அழைத்து வந்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது வாடிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த முதல் காளை அவிழ்த்து விடப்பட்டது. முதல் காளையை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த 621 காளைகளில் தகுதிபெற்ற 616 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதேபோல் 257 மாடுபிடி வீரர்களில் 7 பேர் உடல் தகுதி இல்லாததால் 250 பேர் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித்தள்ளியதில் 16 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டின் உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் என மொத்தம் 22 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அரசநத்தம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(வயது 21) என்ற மாடுபிடி வீரரை மாடு முட்டியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜல்லிக்கட்டு போட்டி நிபந்தனைகளின் படி முறையாக நடைபெறுகிறதா என்பதை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதேபோல் சுழலும் கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தீராம்பட்டி விழாக்குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story