களக்காடு- முண்டந்துறை வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை, புலிகள் காப்பக துணை இயக்குனர் பேட்டி

களக்காடு-முண்டந்துறை வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் 7 நாட்கள் வரை தடை விதிக்கப்படுகிறது.
அம்பை,
அம்பை வனத்துறை அலுவலகத்தில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கத தேஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேசிய புலிகள் காப்பகம் சார்பில் களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குழுவாக செல்கின்றனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (சனிக்கிழமை) பாபநாசத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகில் நடக்கிறது.
களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக கணக்கெடுப்பு பணியில் 7 ரேஞ்சுகள் கொண்ட 50 பீட்டுகளாக பிரிந்து செயல்பட உள்ளனர். ஒரு பீட்டுக்கு வனத்துறையில் இருந்து 3 பேரும், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குழுவில் 3 பேரும் சேர்ந்து ஒரு பீட்டுக்கு 6 பேர் வீதம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புலிகள் மற்றும் வனவிலங்கின உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம், எச்சங்கள் போன்றவற்றை செல்போன் மூலம் பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலியை, ஜி.பி.எஸ். கருவி மூலம் இணைத்து நவீன முறையில் மிக துல்லியமாக புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
கடந்த ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இங்கு 16 புலிகள் இருப்பது தெரியவந்தது. தற்போது அதைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புலிகள் கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு நாளை (28-ந் தேதி) முதல் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இதனால் அருவி பகுதிகளில் குளிக்கவோ, மாஞ்சோலைக்கு செல்லவோ முடியாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்பவர்கள், அரசு பஸ் மூலமாக சென்று வரலாம். அதற்கு தடை கிடையாது. மணிமுத்தாறு அருவி பகுதியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story