பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சிவகங்கையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சிவகங்கையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:28 AM IST (Updated: 28 Jan 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை,

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் சண்முகராஜன், நகர தலைவர் பிரபாகரன், மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் திருமொழி, உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

Next Story