நெல்லையில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


நெல்லையில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

நெல்லை,

உணவு வீணாவதை தடுத்து பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவை கொண்டு போய் சேர்க்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நெல்லையில் நேற்று நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

21 கிலோ மீட்டர் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தொடங்கி வைத்தார். 10 கிலோ மீட்டர் போட்டியை டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரும், 5 கிலோ மீட்டர் போட்டியை கலெக்டர் சந்தீப் நந்தூரியும் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டிகள் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானம் அருகில் தொடங்கி அண்ணா விளையாட்டு மைதானம் வரை சென்றது. போட்டியையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ், பதக்கங்களும் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி-சர்ட், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story