அன்னூர் அருகே பெண்ணை கொன்று நகை- பணத்துடன் தப்பிய 3 தொழிலாளர்களை மேற்கு வங்காள போலீஸ் உதவியுடன் பிடிக்க தீவிரம்

அன்னூர் அருகே பெண்ணை கொன்றுவிட்டு நகை-பணத்துடன் தப்பிய 3 தொழிலாளர்களை மேற்கு வங்காள போலீஸ் உதவியுடன் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணுவக்கரை ஊஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58), விவசாயி. இவருடைய மனைவி ராஜாமணி (48). இவர்களுடைய மூத்த மகள் சுகன்யா, கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் ஜனனி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மயில்சாமி, ராஜாமணி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
மயில்சாமி தோட்டத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டில், டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் (29), பிந்து (20), அஜய் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் தோட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தங்கி இருந் தனர்.
இந்த நிலையில் கடந்த, 25-ந் தேதி நள்ளிரவில் அவர்கள் 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுக்க மயில்சாமி சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அவர்கள் அவரை தாக்கி கொலை செய்ய முயன்றனர். சத்தம் கேட்டு வந்த ராஜாமணியை அவர்கள் 3 பேரும் தாக்கி, கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு, 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கொள்ளையர்கள் 3 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளதுடன், தலைமறைவான அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறிய தாவது:-
ராஜாமணியை கொன்றுவிட்டு நகை-பணத்துடன் தப்பிச்சென்ற தொழிலாளிகள் 3 பேரும் ஆந்திராவில் இருப்பதாக அவர்களின் செல்போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படையினர் ஆந்திரா விரைந்தனர். ஆனால் அவர்களின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் பதுங்கி இருப்பது குறித்து கண்டறிய முடியவில்லை. இதனால் தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது. எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வில்லை. தற்போது அவர்கள் 3 பேரின் புகைப்படம் கிடைத்து உள்ளதால், அதை மேற்கு வங்காள போலீசிடம் கொடுத்து, அவர்களின் உதவியுடன் பிடிக்க முடிவு செய்து உள்ளோம். இதற்காக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு, தகுந்த பாதுகாப்புடன் மற்றொரு தனிப்படை ஓரிரு நாட்களில் மேற்கு வங்காளம் செல்ல உள்ளது. எனவே விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.
பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களின் முழு விவரங் களையும் அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து உள்ளனர். ஆனால் கட்டிட தொழில், கூலித்தொழில் செய்யும் வடமாநிலங்களை சேர்ந்தவர் களின் முழு விவரத்தை வேலை கொடுப்பவர்கள் வாங்குவது இல்லை.
எனவே இனியாவது தங்களிடம் வேலை செய்யும் வடமாநிலத்தவரின் முழு விவரங்களையும் கண்டிப்பாக அனைவரும் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story