கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடந்தது

கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூரு,

ஆலோசனை கூட்டம்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆகியோர் கர்நாடகத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர், முதல்-மந்திரி சித்தராமையா, பிரசார குழு தலைவர் டி.கே.சிவக்குமார், செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொகுதிகளின் பொறுப்பாளர்கள்
இதில் பிளாக் காங்கிரஸ் தலைவர்கள், சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்களின் சொந்த பூத்துகளில் அதிக ஓட்டுகளை பெற முயற்சி செய்ய வேண்டும் என்று வேணுகோபால் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் நிர்வாகிகள் தங்களின் சொந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் பிளாக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் வியூகம் வகுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று வேணுகோபால் கூறினார். பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும், கர்நாடக அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story