உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்குவது உறுதி - தங்கதமிழ்செல்வன்

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன், கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொடைக்கானல்,
122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தான் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் ஆக்கினோம். எந்த தவறும் செய்யாத எங்களை பதவி நீக்கம் செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இதில், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என முழுமையாக நம்புகிறோம். ஆனால் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வருமானால் மீண்டும் மேல்முறையீடு செய்ய மாட்டோம்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.
தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி என்பது தவறு. அவர்கள் எங்களை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்கள். தி.மு.க.வை மக்கள் விரும்பவில்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக டி.டி.வி.தினகரன் தலைமையில் தனிக்கட்சி தொடங்குவது உறுதி. இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story