கிருஷ்ணகிரி அருகே கார் மோதி சிறுமி பலி குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்


கிருஷ்ணகிரி அருகே கார் மோதி சிறுமி பலி குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே கார் மோதி சிறுமி பலியானாள். அவளுடன் நடந்து சென்ற குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவரது மகள் அலமேலு (வயது 6). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த லட்சுமி (50), தருணிகா (3) ஆகியோருடன் அலமேலு கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த கார் 3 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் லட்சுமி, தருணிகா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 

Next Story