தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்


தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:00 PM GMT (Updated: 2 Feb 2018 7:34 PM GMT)

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

ஆராய்ச்சி நிலையம்


தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கடந்த 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி தொடங் கப்பட்டது. இந்த நிலையம் மீன்வள ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையம் தொடங் கப்பட்டு 71-வது ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட அனுமதி அளிக் கப்பட்டது.

பார்வையிட்டனர்


அதன்படி நேற்று காலை முதல் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்தனர். அங்கு சிப்பிகளை உருவாக்குதல், சிப்பிகளை பண்ணையில் வளர்த்தல், கடல் முத்துக்கள் உருவாக்குதல், கடல் சங்கு, கடல் அட்டை வகைகளை குஞ்சு பொரிக்க வைத்தல், ஆழ்கடல் ஆராய்ச்சி, மீன் அருங்காட்சியகம் போன்றவற்றை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

அப்போது, தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், முதுநிலை விஞ்ஞானி ஜெகதீஷ், ஆராய்ச்சியாளர் காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் கூண்டுகளில் மீன்வளர்த்தல், கடல்பாசி வளர்ப்பு, இறால் வளர்ப்பு மற்றும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். ஆராய்ச்சி நிலையத்தை ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story