கர்நாடகத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தினேஷ் குண்டுராவ் தவறான தகவலை வெளியிட்டு உள்ளார் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி


கர்நாடகத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தினேஷ் குண்டுராவ் தவறான தகவலை வெளியிட்டு உள்ளார் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2018 2:45 AM IST (Updated: 4 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தினேஷ் குண்டுராவ் தவறான தகவலை வெளியிட்டு உள்ளதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தினேஷ் குண்டுராவ் தவறான தகவலை வெளியிட்டு உள்ளதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு


கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு மீது அவர் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்குகிறது என்பது தெரியாமலேயே அவர் குற்றம்சாட்டுவது சரியல்ல.

14-வது நிதி ஆணையத்தின் மூலம் கர்நாடகத்திற்கு ரூ.10 ஆயிரத்து 533 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதற்கு அவரிடம் ஆதாரம் உள்ளதா?. கர்நாடகத்திற்கான நிதி குறைக்கப்பட்டு இருப்பதாக அவர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி குறித்து தினேஷ் குண்டுராவ் தகவல் தெரிவிக்காதது ஏன்?.

கூடுதலாக 43 சதவீத நிதி

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 441 கோடி நிதியை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது. கூடுதலாக 43 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. அன்ன பாக்ய திட்டத்தில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டு வெளியிட வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 1.36 லட்சம் டன் அரிசியை வழங்கியுள்ளது. இதற்கு எங்களிடம் ஆவணங்கள் உள்ளன.

மோடி கர்நாடகத்திற்கு வரும்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவே தினேஷ் குண்டுராவ் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில அரசு செய்த செலவுக்கு யார் வேண்டுமானாலும் கணக்கு கேட்க முடியும். அனைவருக்கும் அதிகாரம் உள்ளது.

மூடிமறைக்க காங்கிரஸ் முயற்சி

மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நிதி ஆணையத்திடம் கேள்வி கேட்க வேண்டியதுதானே. உண்மையான புள்ளி விவரங்களை மூடி மறைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது ஏன்?. உண்மை தகவல்கள் தெரிந்தும் தினேஷ் குண்டுராவ் மூலமாக சித்தராமையா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆட்சி நிர்வாகத்தை சரியாக நடத்துவதில் சித்தராமையா முழுமையாக தோல்வி அடைந்துவிட்டார்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story