‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ சாத்தியமா?

தேர்தல்... ஜனநாயகத்தில் மக்கள் தங்களை ஆளும் எஜமானர்களை தாங்களே தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அந்த வகையில் பார்த்தால், ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால் நடைமுறையில் அப்படித்தான் இருக்கிறதா? என்று கேட்டால், கேட்பவரை கேலியாக பார்ப்பார்கள்.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக 1952-ம் ஆண்டுதான் எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது.
அதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், நில வரி, வீட்டு வரி செலுத்துகிறவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப்போடவும் முடியும்.
அப்போது வேட்பாளர்களின் பெயர்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற பல வண்ணங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். எனவே வேட்பாளரின் பெயரை சொல்லி ஓட்டு கேட்காமல், பெட்டிகளின் நிறத்தை சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள். அதன்பிறகு கால மாற்றத்துக்கு ஏற்ப தேர்தல் முறையிலும் மாற்றம் வந்தது.
நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள், மாநில சட்டசபைகள் கலைப்பு, கவிழ்வது போன்ற காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இரண்டுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது. எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதில் உள்ள ஒரு பாதகமான அம்சம் எது என்றால், அதிக செலவு. அதாவது இரண்டுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பதே ஒரு சாதனை ஆகும். நாடாளுமன்றத்துக்கு இதுவரை 16 பொதுத்தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதேபோல் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கிடையே, மாநில அரசு கவிழ்ந்தாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.
முதன் முதலாக 1952-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ஆன செலவு வெறும் ரூ.10½ கோடி. அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தல் நடத்த ரூ.1,300 கோடி செலவானது. அதன்பிறகு நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தொடர்ந்து செலவு அதிகரிக்கவே செய்தது. இதுதவிர அவ்வப்போது மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த எக்கச்சக்கமாக செலவாகிறது.
இப்படியாக ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தும் போதும் அரசு கஜானாவில் உள்ள பணம் கோடிக்கணக்கில் செலவு ஆவதால், மத்திய அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படுகிறது. குறிப்பாக தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வது, பாதுகாப்பு படைகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது, பார்வையாளர்களை நியமித்து கண்காணிப்பது போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
எனவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற புதிய யோசனையை பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை தெரிவித்து, இதுகுறித்து அரசியல் கட்சிகளிடையே கலந்து ஆலோசித்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தேர்தல் சமயத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதையும், இது நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு, ஜனாதிபதியின் யோசனையை முன்னெடுத்துச் சென்று ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது 7 தேர்தல்கள் நடைபெறுவதாகவும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏராளமான பணம் செலவு ஆவதாகவும், வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்க அதிக அளவிலான பாதுகாப்பு படையினரை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதம் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு கர்நாடக மாநில சட்டசபைக்கும், அதைத் தொடர்ந்து சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய 16-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா வலுவாக இருக்கிறது. மேலும் நாட்டில் உள்ள 30 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் அந்த கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் முதுகெலும்பே பிரதமர் மோடிதான். கடந்த 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது செல்வாக்குதான் அக்கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. மோடி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் நாட்டில் அவர்தான் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்குகிறார். சர்வதேச அளவிலும் பிரபலமாக விளங்குகிறார்.
என்றாலும், பிரச்சினைகள் என்று வரும் போது எப்போதுமே மக்கள் தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீதுதான் காட்டுவார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையையும், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி.வரியை அமல் படுத்தியதையும் பாரதீய ஜனதா தங்கள் சாதனையாக கருதுகிறது.
கருப்பு பணத்தை ஒழித்து, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்ததாகவும், நாட்டில் ஒரே சீரான வரிவிதிப்பு முறை இருக்க வேண்டும் என்பதற்காக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கொண்டு வந்ததாகவும் மத்திய அரசு கூறுகிறது.
அரசின் இந்த நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும், இந்த இரு நடவடிக்கைகளாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் பிரதமர் மோடியின் மீது பரவலாக அதிருப்தி நிலவுகிறது.
இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும், சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலிலும் பகிரங்கமாக எதிரொலித்தது. பஞ்சாபில் அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. குஜராத்தில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட போதிலும், அந்த கட்சிக்கு முந்தைய சட்டசபை தேர்தலை விட குறைவான இடங்களே கிடைத்தன.
இந்த தோல்விகள் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்த போதிலும், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதை எண்ணி திருப்திபட்டுக்கொள்கிறார்கள்.
மோடியின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை நடத்தினால், நிலைமை மோசமாவதற்கு முன்பு மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு, பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பாரதீய ஜனதா கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் யோசனையை எதிர்க்கட்சிகள் மிகவும் எச்சரிகையுடன் பார்க்கின்றன. அத்துடன், நாடாளுமன்ற தேர்தலின் போது மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தால், எதிர்க்கட்சிகளை தாக்கி மோடி செய்யும் பிரசாரம் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான போக்கை ஏற்படுத்தும் என்று கருதுகின்றன. அதாவது மோடியின் பிரசாரம் சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தர வாய்ப்பு இருப்பதாக நினைக்கின்றன.
ஆனால் இந்த கருத்தை பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் மறுக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டதையும், அப்போது அங்கு மாநில கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை அதுபற்றிய விவாதம் இன்னும் தொடங்கவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவு குறையும் என்பதால், இந்த யோசனைக்கு தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்து இருக்கிறது. ஆனால் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தில் 356-வது பிரிவு மாநில அரசுகளை கலைக்க வகை செய்கிறது. இந்த பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசை கலைத்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் நடைபெறும். அதுவரை அந்த மாநிலம் காத்திருக்க வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமைவதோடு ஜனநாயகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
எனவே ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் முறையை கொண்டு வந்தால், இந்த பிரிவை நீக்கவேண்டும்.
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனை தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இது நனவாக இன்னும் எத்தனையோ கட்டங்களை தாண்டிச் செல்லவேண்டும். எனவே இது சாத்தியம் ஆகுமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
பாரதீய ஜனதாவின் தேர்தல் வித்தை
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை, பாரதீய ஜனதாவின் தேர்தல் வித்தை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் வர்ணித்து இருக்கிறார்.
ஒரே தேசம்; ஒரே வரி (ஜி.எஸ்.டி. ) என்று சொன்னது எப்படி ஒரு வித்தையோ அதேபோல் இப்போது ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்று சொல்வதும் ஒரு வித்தைதான் என்று அவர் கூறி உள்ளார்.
இந்தியாவில் 30 மாநிலங்கள் இருப்பதால், தற்போதைய அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ப.சிதம்பரம் மற்றொரு முக்கியமான கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். பதவி ஏற்ற சில நாட்கள் அல்லது மாதங்களிலேயே ஒரு மாநில அரசு கவிழ்ந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரும் வரை அந்த மாநிலத்தை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வைத்திருக்க முடியுமா? என்றும் அவர் கேள்விக்கணையை வீசி இருக்கிறார்.
நியாயமான கேள்விதான்...
தி.மு.க. எதிர்ப்பு
நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது நடைமுறைக்கு சரிப்பட்டு வராத காரியம் என்று கூறியுள்ள அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டால், அதனை மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாகத்தான் கருதமுடியும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மோடி குறித்து பாரதீய ஜனதா உருவாக்கி இருந்த மாய தோற்றம் உடைவதால் ஏற்பட்ட பதற்றத்தின் விளைவாக, ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முழக்கத்தை அக்கட்சியினர் கையில் எடுத்து இருப்பதாகவும், ஆனால் இது எடுபடாது என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகிறார்.
செல்வாக்கு இழந்துள்ள மாநிலங்களில் ஆட்சியை காப்பாற்றவும், மோடிக்கு அதிகமான செல்வாக்கு இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்தவும், பாரதீய ஜனதா மீது ஏற்பட்டு இருக்கும் எதிர்மறை எண்ணத்தை திசை திருப்புவதற்காகவுமே ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற யோசனையை அக்கட்சி முன்வைத்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை இன்றைய காலச்சூழ்நிலைக்கு சரிப்பட்டு வராது என்றும், ஒரு கட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்சியை கலைக்கும் நிலை ஏற்பட்டால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து சட்டசபை தேர்தலோ அல்லது சட்டசபை தேர்தலை எதிர்பார்த்து நாடாளுமன்ற தேர்தலோ காத்திருக்க முடியாது என்று அரசியல் விமர்சகரான முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கருத்து தெரிவித்து உள்ளார்.
தொகுதிகள் எத்தனை?
32 லட்சத்து 87 ஆயிரத்து 263 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவில் 81 கோடிக்கும் அதிகமான வாக்காளர் இருக்கிறார்கள். 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
மாநிலங்களில் மொத்தம் 4,120 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கின்றன.
இடைத்தேர்தல்களால் ஏற்படும் செலவு
ஒரு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் மரணம் அடைந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ காலியான அந்த தொகுதிக்கு 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
அந்த வகையில் நாடு முழுவதும் அவ்வப்போது ஏதாவது தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக அதிக பணம் செலவாகிறது. ஏராளமான அதிகாரிகள், பாதுகாப்பு படையினரும் தேவைப்படுகிறார்கள். இடைத்தேர்தலை நடத்தி முடிப்பதே தேர்தல் கமிஷனுக்கு பெரும்பாடாக இருக்கிறது.
எனவே, இடைத்தேர்தல்களை தவிர்த்தாலே கணிசமான செலவை அரசு குறைக்க முடியும் என்றும், ஒரு தொகுதி காலியானால், எந்த கட்சியை சேர்ந்தவர் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தாரோ, அந்த கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கிவிடலாம் என்றும், இதனால் தேர்தல் நடத்தும் வீண் செலவையும், மனித உழைப்பையும் தவிர்க்கலாம் என்றும் சில அரசியல் தலைவர்கள் யோசனை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதை தேர்தல் கமிஷன் பரிசீலிக்குமா?

Related Tags :
Next Story