விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரை கத்தி முனையில் மிரட்டிய பிக்பாக்கெட் ஆசாமி கைது


விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரை கத்தி முனையில் மிரட்டிய பிக்பாக்கெட் ஆசாமி கைது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:45 AM IST (Updated: 6 Feb 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

பிக்பாக்கெட் ஆசாமியிடம் விசாரணை நடத்த முயன்றபோது போலீசாரை கத்தி முனையில் மிரட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கோவை,

கோவை ஆத்துப்பாலம், பாலுசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் அன்சாருதீன் (வயது 28). இவர் மீது ஜேப்படி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 4 குற்ற வழக்குகள் உள்ளன. ஜாமீனில் விடுதலையாகி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் அன்சாருதீன் நின்று கொண்டு இருந்தார். அப்போது பிக்பாக்கெட் ஆசாமிகளை கண்காணிக்கும் தனிப்படையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகசாமி, தாஜுநிஷா, ஏட்டுகள் குமார், சதீஷ்குமார் ஆகியோர் அவரை பிடித்து விசாரணை நடத்த முயன்றனர்.

அப்போது, அன்சாருதீன் கத்தியை எடுத்து போலீசாரை மிரட்டினார். தன்னை போலீசார் பிடித்து அடித்து தொந்தரவு செய்வதாக கூறிக்கொண்டே தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தனிப்படையினர் விரட்டிச்சென்று அவரை மடக்கிப்பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அன்சாருதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

Next Story