ஏரியில் பெண் பிணம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றது அம்பலம்

மேல்மலையனூர் அருகே ஏரியில் பெண் பிணமாக கிடந்த வழக்கில், அவரை கள்ளக்காதல் விவகாரத்தில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சமுத்தக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் கடந்த மாதம் 15–ந்தேதி ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வளத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது உடலில் ஒரு கல் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அவரை கொலை செய்து, கல்லை கட்டி ஏரியின் உள்ளே வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்கிற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சந்தேக மரணம் என்று வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் படி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரபாலன் மற்றும் போலீசார் விழுப்புரம் மற்றும் கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் காணாமல் போன பெண்கள் பற்றிய விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அதில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மதுரா பெரும்பட்டூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி சபிதா என்கிற சின்னபெண்ணு(வயது 38) என்பவர் கடந்த 8–ந்தேதி காணாமல் போனது தெரியவந்தது. இவருக்கு நீஷதா(20), வேண்டா(18) கனகலட்சுமி(13) என்று மூன்று மகள்கள் உள்ளனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே நந்திபுரம் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் பிரகாஷ் என்கிற ராமச்சந்திரன் (27) என்பவருடன் சபிதாவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, பிரகாஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து பிரகாசை தேடி அவரது சொந்த ஊருக்கு போலீசார் சென்றனர். ஆனால் அவர் சென்னைக்கு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் சென்னை விரைந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவது பற்றி அறிந்த பிரகாஷ், தேவனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் நேற்று சரணடைந்தார். பின்னர் கார்த்திகேயன் வளத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, பிரகாசை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது சபிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
திருவண்ணாமலை மாவட்டம் மதுராபெம்பட்டூர் கிராமத்தில் என்னுடைய உறவினர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை பார்த்துவருவதற்காக அவ்வபோது அங்கு செல்வேன். அப்போது அதேபகுதியில் வசித்து வந்த சபிதாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த 1½ ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்தோம். சவிதா தனது கணவர் ரங்கநாதனுடன் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். அவ்வபோது சேத்துபட்டில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு என்னை பார்க்க நந்திபுரத்துக்கு வருவார். பின்னர் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம். எங்களுக்குள் இருக்கும் பழக்கம் உறவினர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கிடையே சவிதாவிடம் நான் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். இதை தரும்படி கேட்டுந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 10–ந்தேதி பொங்கல் பண்டிகைக்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கணவரிடம் தெரிவித்து விட்டு, இரவில் நந்திபுரம் வந்தார்.
நாங்கள் இருவரும் கிராமத்தில் எனது விளை நிலத்தில் வைத்து சந்தித்து பேசினர். அப்போது சபிதா என்னிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த கயிற்றை எடுத்து சவிதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து, அங்குள்ள வேப்பமரத்தில் தொங்கவிட்டேன்.
மறுநாள் நடந்த சம்பவம் குறித்து உறவினர்களான வெங்கடேசன்(வயது 31), ஏழுமலை(45), கமலக்கண்ணன்(30) ஆகியோரிடம் கூறினேன். தொடர்ந்து போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, சபிதாவின் உடலை எங்காவது கொண்டு போட்டுவிட முடிவு செய்தோம்.
அதன்படி, எனது உறவினர்கள் 3 பேரின் உதவியுடன் 11–ந்தேதி இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சவிதாவின் உடலை வைத்து எடுத்து சென்றேன். அப்போது மோட்டார் சைக்கிளை கமலக்கண்ணன் ஓட்டினார். ஏழுமலையும், வெங்கடேசனும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எங்களை பின்தொடர்ந்து வந்தனர்.
சமுத்தக்குப்பம் ஏரிக்கு சென்று பிணத்தை வைத்து விட்டு அங்கிருந்த கல்லை எடுத்து சவிதாவின் உடலில் சேர்த்து கட்டி ஏரியில் வீசிவிட்டு வந்துவிட்டோம். தொடர்ந்து நான் சென்னைக்கு சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவது பற்றி அறிந்தேன். இதனால் இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்பதால் சரணடந்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பிரகாஷ் மற்றும் வெங்கடேசன், ஏழுமலை, கமலக்கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 2 மோடடார் சைக்கிள்கள், கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் செஞ்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படித்தி, கடலூர் மத்திய சிறையல் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :
Next Story