கள்ளநோட்டுகள் வைத்திருந்த வழக்கு: 2 பேருக்கு தலா 6 ஆண்டு சிறை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளநோட்டுகள் வைத்திருந்த வழக்கில் 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,

கள்ளநோட்டு
மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில், 2 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
ஒருவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளும், மற்றொருவரிடம் இருந்து ரூ.97 ஆயிரத்துக்கான கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் ஹரூண் நாயக், அஸ்ரர் ஹமித், அசார் என்பது தெரியவந்தது.
ஜெயில் தண்டனை
அவர்கள் மீது போலீசார் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் ஹரூண் நாயக், அஸ்ரர் ஹமித் ஆகியோர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் நோக்கத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.
ஆனால் அசாரிடம் இருந்து கள்ளநோட்டு எதுவும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு ஹரூண் நாயக், அஸ்ரர் ஹமித் ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அசார் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story