மாங்காடு அருகே கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
மாங்காடு அருகே கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
மாங்காடு, பட்டூர் லீலாவதி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் அருண்குமார் (வயது 19). திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் வரவேற்பு கொடிகள் நடும் வேலை செய்து வந்தார். கோவூரில் இருந்து தண்டலம் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது.
அதற்காக நேற்று வரவேற்புக்காக அலங்கார கொடிகள் இரும்பு கம்பிகளில் நடும் பணியில் அருண்குமார் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார வயரில் கொடியின் இரும்புகம்பி உரசியதில் அருண்குமார் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story