போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 17 பேர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 17 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2018 2:45 AM IST (Updated: 12 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தேவர் பேரவையின் நிறுவன தலைவராக இருப்பவர் சென்னையை சேர்ந்த முத்தையா.

இளையான்குடி,

தமிழ்நாடு தேவர் பேரவையின் நிறுவன தலைவராக இருப்பவர் சென்னையை சேர்ந்த முத்தையா தேவர் (வயது 41). இவரது தலைமையில் 16 பேர் கொண்ட கும்பல் 3 கார்களில் இளையான்குடி அருகே கோட்டையூர் என்ற இடத்தில் கொடி வைத்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் அவர்களிடம் அனுமதி எதுவும் பெறாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு முத்தையா தேவர் தலைமையில் வந்த தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதுடன், அவரை பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

 இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, மோகன் தலைமையிலான போலீசார் கோட்டையூர் விரைந்து சென்று முத்தையா தேவர் மற்றும் 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கார்களை பறிமுதல் செய்தனர். 

Related Tags :
Next Story