மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை மையம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கும் மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகளுக்கான பாராட்டு விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆசிரிய-ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. ஆசிரிய-ஆசிரியைகளாகிய உங்களுக்கு இது நன்றாக தெரியும். வெளிப்படையாக செயல்படுவதில் பல சிக்கல்கள் உண்டு. எங்களுக்கும் பல இக்கட்டான சூழல்கள் இருந்தாலும், இடர்பாடுகளை களைந்து வெளிப்படை தன்மையாக செயல்பட்டு வருகிறோம்.
தமிழக அரசு ரூ.26 ஆயிரத்து 938 கோடி செலவில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. தற்போது புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. விரைவில் 10 ஆயிரம் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களான உங்கள் பணி மிகவும் பெரியது.
பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை மத்திய அரசின் மூலம் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. வரும் ஆண்டு 1000 பள்ளிக்கூடங்களில் இந்த ஆய்வகம் அமைக்கப்படும். வெளிநாடுகளைப்போல ரோபோடிக்ஸ் பாடத்திட்டம் தமிழக மாணவ-மாணவிகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படும். வரும் கல்வி ஆண்டு 500 பள்ளிக்கூடங்களில் ரோபோடிக்ஸ் பாடம் கற்றுக்கொடுக்கும் நிலை உருவாக்கப்படும்.
தற்போது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை ஒரே மாதிரியான சீருடை உள்ளது வரும் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நிகராக சீருடைகள் மாற்றம் செய்யப்படும். 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகளுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் 1 முதல் 5-ம் வகுப்புவரையும், 6 முதல் 8-ம் வகுப்புவரையும் சீருடைகள் தரமாக மாற்றப்படும்.
மாநிலம் முழுவதில் இருந்தும் 100 சிறந்த மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள் 16 நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். இதன் மூலம் அங்குள்ள அறிவியல், கல்வி, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை தெரிந்து கொள்வார்கள். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் கிராமப்புற மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில், தமிழ் வழியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெரிய காயங்கள் என்றால் ரூ.50 ஆயிரம், சிறு காயங்களுக்கு ரூ.25 ஆயிரம் விபத்து நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இதுபோன்ற திட்டம் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் மட்டுமல்ல, உலகிலேயே எங்கும் இல்லை. அதுபோல் மாணவ- மாணவிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட இலவச ஆலோசனை மையம் அமைக் கப்பட உள்ளது. இதில் மாணவ-மாணவிகள் தொட ர்பு கொள்ள இலவச “ஹெல்ப்லைன்” எண் 11417 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தையும் இலவச எண் செயல்பாட்டினையும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார். 108 என்ற எண்ணுக்கு போன் செய்தால் மருத்துவ உதவி வருவதுபோன்று, 11417 என்ற எண்ணில் அழைத்தால் உங்களுக்கு அனைத்து விதமான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

Related Tags :
Next Story