ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்


ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2018 5:28 AM IST (Updated: 21 Feb 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன் வர வேண்டும் என திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் ரத்தம் செலுத்தும் மருத்துவத்துறை சார்்பில் தொடர் கல்வி கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மருத்துவத்துறை சார்்பில் கடந்த ஆண்டு 51 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் 1,756 யூனிட்டும், மருத்துவமனை மூலமாக 3,116 யூனிட்கள் ரத்தம் என மொத்தம் 4,872 யூனிட் ரத்தம் பெறப்பட்டன. இதன்மூலம், 4,672 நோயாளிகள் பயன் பெற்றனர்். கொடையாளர்களின் ரத்தம் நோய் கிருமிகளின் தாக்கம் அறவே இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அந்த ரத்தம் பயன்படுத்தப்படுகிறது.

பொதுமக்களும், நோயாளிகளின் உறவினர்்களும் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில், ரத்தத்தை அதன் மூலக் காரணிகளாக பகுப்பாய்வு செய்யும் விதம், ரத்தம் செலுத்தும் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ரத்தம் செலுத்தும் போது ஏற் படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிக்கும் முறை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

இதில் ரத்த வங்கி டாக்டர் பிரதியுஷா மொவாலா, மருத்துவ உதவி பேராசிரியர் கார்்த்திகேயன், தலைமை மயக்க டாக்டர் கார்த்திக், உதவி கதிரியக்கவியல் துறை டாக்டர் ஜெயக்குமார், நோய்க்குறியியல் துறை தலைவர்் கல்யாணி, துணை கண்காணிப்பாளர்் கண்ணன், கல்லூரி துணை முதல்வர் சுமதி, நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story