மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு 1–ந் தேதி வினாடி– வினா போட்டி பதிவு செய்ய நாளை கடைசிநாள்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு 1–ந் தேதி வினாடி– வினா போட்டி பதிவு செய்ய நாளை கடைசிநாள்
x
தினத்தந்தி 24 Feb 2018 8:30 PM GMT (Updated: 24 Feb 2018 12:48 PM GMT)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை சார்பில் மாணவ– மாணவிகளுக்கு வினாடி– வினா போட்டி 1–ந் தேதி நடக்கிறது.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை சார்பில் மாணவ– மாணவிகளுக்கு வினாடி– வினா போட்டி 1–ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு பெயர்களை பதிவு செய்ய நாளை கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வினாடி– வினா போட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கணிதத்துறை சார்பில் கணித வினாடி– வினா போட்டி வருகிற 1–ந் தேதி (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கில் நடக்கிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 3 மாணவர்கள் கொண்ட அணி கலந்து கொள்ளலாம். மேலும் அந்த அணியுடன் ஒரு ஆசிரியரும் வரலாம்.

போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் தங்களது கல்லூரி அணி குறித்த விவரங்களை கல்லூரியின் கணிதத்துறை தலைவர், பல்கலைக்கழக கணிதத்துறை தலைவருக்கு கடிதம் மூலமாகவோ அல்லது selva_158@yahoo.co.in என்ற ஒருங்கிணைப்பாளரின் மின் அஞ்சல் முகவரிக்கோ நாளைக்குள் (திங்கட்கிழமை) பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சான்றிதழ்கள்

ஒரு கல்லூரியில் அரசு நிதி உதவி பெறும் இளங்கலை கணிதமும் மற்றும் சுயநிதி பிரிவு இளங்கலை கணிதமும் பயிற்றுவிக்கப்பட்டால், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி கலந்து கொள்ளலாம். இதுகுறித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கடிதம் கல்லூரி முதல்வரிடம் பெறப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நாளைக்குள் தங்கள் அணி விவரங்களை பதிவு செய்யாதவர்கள் போட்டியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். முதல் பரிசு பெறும் அணிக்கு சுழற்கோப்பையும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Next Story