ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், விபத்து ஏற்படும் அபாயம்


ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 3 March 2018 3:15 AM IST (Updated: 2 March 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

ஒரகடம்- சிங்கபெருமாள் கோவில் சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக சிங்கபெருமாள்கோவில் முதல் ஒரகடம் வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை சென்று வருகிறது.

இந்த நிலையில் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் தொடர்ந்து நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது.

இதனால் இந்த சாலையில் செல்லும் அரசு பஸ்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்டுகின்றனர். விபத்து ஏற்படும்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் ஒரகடம் பகுதி உள்ளது.

எனவே போக்குவரத்து போலீசார் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story