குடிநீர் கேட்டு மேல்நிலை தொட்டிமீது ஏறி நின்று 3 பேர் தற்கொலை மிரட்டல்


குடிநீர் கேட்டு மேல்நிலை தொட்டிமீது ஏறி நின்று 3 பேர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே குடிநீர்கேட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், பள்ளி மாணவன் உள்பட 3 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் எல்லிபாளையம் கிராமம் உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி ன்றன. இந்த பகுதிகளுக்கு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இதனால் பாதிக் கப்பட்ட அவர்கள் பலமுறை சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து சில நாட்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தினார். இதைக் கேட்ட வட்டார (ஊராட்சி)வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், அவர் களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், எலட்ரீசியன் பாலு, பிளஸ்-1 மாணவன் தமிழரசன் ஆகிய 3 பேர் நேற்று காலை 9 மணியளவில் செல்லிபாளை யத்தில் உள்ள சுமார் 50 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேல் ஏறி நின்று அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல் அங்கு விரைந்து சென்று குடிநீர் மேல்நிலை தொட்டி மீது நின்ற 3 பேரையும் கீழே இறங்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் மண்டல அலுவலர் செந்தில், சேந்தமங் கலம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ் ஆகியோர் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டரை மாற்றி புதிய தாக ஒருவரை நியமித்து தொடர்ந்து குடிநீர் வினி யோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த 3 பேரும் கீழே இறங்கினர். 

Next Story