கல்லூரி மாணவிகள் 3 பேர் சாவு 2 பேர் படுகாயம்

பெங்களூருவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் ஒரு மாணவி, மாணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் பிரவீன் (வயது 23). இவர், பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அதே கல்லூரியில் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி(23), ஹர்ஷா ஸ்ரீவஸ்தவ்(23), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆர்சியா(24) ஆகிய 3 மாணவிகளும் எம்.பி.ஏ. படித்து வந்தார்கள். அவர்கள் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தார்கள். அரிக்கெரேயில் வசிக்கும் ஒரு மாணவியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் ஸ்ருதி, ஹர்ஷா, ஆர்சியா மற்றும் பிருத்வி ஆகிய 4 மாணவிகளும் வந்திருந்தார்கள். அங்கேயே நேற்று முன்தினம் இரவு தங்கினார்கள்.
நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து காரில் பிரவீன் கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது வழியில் அரிக்கெரேயில் உள்ள மாணவியின் வீட்டில் தங்கியிருந்த ஸ்ருதி, ஹர்ஷா, ஆர்சியா, பிருத்வி ஆகிய 4 மாணவிகளையும் தனது காரில் கல்லூரிக்கு பிரவீன் அழைத்து கொண்டு புறப்பட்டார். காலை 7.30 மணியளவில் பன்னரகட்டா ஜங்ஷன், கொப்பகேட் அருகே நைஸ் ரோட்டில் வரும் போது திடீரென்று பிரவீன் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில், கார் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது.
இந்த கோர விபத்தில் ஆர்சியா மற்றும் ஹர்ஷா தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். ஸ்ருதி, பிருத்வி மற்றும் பிரவீன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளிமாவு போக்குவரத்து போலீசார், உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி ஸ்ருதி இறந்து விட்டார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பிரவீன் மற்றும் மாணவி பிருத்விக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நைஸ் ரோட்டில் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல பிரவீன் தனது காரை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் பல்டி அடித்து கவிழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உளிமாவு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story