தூத்துக்குடி மாவட்டத்தில் 139 கோவில் பாதுகாப்பு பணி இடத்துக்கு ஆட்கள் தேர்வு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 139 கோவில் பாதுகாப்பு பணி இடத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
139 பணியிடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 139 கோவில் பாதுகாப்பு பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சரகத்தில் 3 பணியிடங்களும், மத்தியபாகத்தில் 6 பணியிடங்களும், முறப்பநாட்டில் 28 பணியிடங்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 19 பணியிடங்களும், செய்துங்கநல்லூரியில் 15 பணியிடங்களும், ஆழ்வார்திருநகரியில் 12 பணியிடங்களும், ஏரலில் 9 பணியிடங்களும், குரும்பூரில் 5 பணியிடங்களும், திருச்செந்தூரில் 10 பணியிடங்களும், குலசேகரன்பட்டினத்தில் 5 பணியிடங்களும், சாத்தான்குளத்தில் 4 பணியிடங்களும், எட்டயபுரத்தில் 3 பணியிடங்களும், குளத்தூர், கழுகுமலை, ஆறுமுகநேரி, ஆத்தூர், மெஞ்ஞானபுரம், பசுவந்தனையில் தலா 2 பணியிடங்களும், ஓட்டப்பிடாரம், கடம்பூர், மணியாச்சி, விளாத்திகுளம், எப்போதும்வென்றான், நாலாட்டின்புதூர், சாயர்புரம், தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு பணியிடங்களும் உள்பட மொத்தம் 139 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பம்
இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. பணியில் சேர விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள் 62 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story