சைக்கிள் ஷமீம்

உலக சுகாதார நிறுவனம் 1988-ம் ஆண்டு போலியோ நோய் பாதிப்பு 99 சதவீதம் குறைந்துவிட்டதாக அறிவித்தது.
உலக சுகாதார நிறுவனம் 1988-ம் ஆண்டு போலியோ நோய் பாதிப்பு 99 சதவீதம் குறைந்துவிட்டதாக அறிவித்தது. ஆயினும் 100 சதவீத போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதும் தொடர் நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. போலியோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலேசியாவில் வசிக்கும் ஷமீம் என்ற இளைஞர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு போலியோ நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இரண்டே வாரங்களில் 2,140 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து மலேசியாவை வலம் வந்திருக்கிறார். இதற்கு அதிக வேகம் செல்லக்கூடிய நவீன சைக்கிளை பயன்படுத்துகிறார். ‘போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம’ என்பது இவருடைய கோஷமாக இருக்கிறது.
‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. எனினும் நாம் சரியாக கவனம் செலுத்தாவிட்டால் போலியோ மீண்டும் உருவாகும் சூழ்நிலை இருக்கிறது. உலகம் முழுவதும் அரசுகளும், அரசு சாரா நிறுவனங்களும் போலியோவை ஒழிப்பதற்காக தீவிர கவனம் செலுத்துகின்றன. எனினும் 100 சதவீதத்தை நெருங்க முடியாத நிலையில்தான் இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை தேர்ந்தெடுத்தேன். சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டேன்’’ என்கிறார்.
ஷமீம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர். தற்போது மலேசியாவில் உள்ள பல் கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரு கிறார். சைக்கிள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஷமீமுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3200 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பயணத்தை 23 நாட்கள் மேற்கொண்டிருக்கிறார். 2015-ம் ஆண்டு பெங்களூரு-ஒடிசா இடையே 1500 கிலோ மீட்டர் (8 நாட்கள் பயணம்), மணிப்பூர்-ஜெய்ப்பூர் இடையே 2500 கிலோமீட்டர் (20 நாட்கள்), ஓஹா முதல் திப்ருகார் வரை 3200 கிலோ மீட்டர் (19 நாட்கள்) என ஷமீமுக்கு சைக்கிள் பயணத்துடனான பந்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Related Tags :
Next Story