பெரம்பலூரில் காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு; 1,696 பேர் எழுதினர் 254 பேர் வரவில்லை


பெரம்பலூரில் காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு; 1,696 பேர் எழுதினர் 254 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 12 March 2018 4:15 AM IST (Updated: 12 March 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வை 1,696 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் 254 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இந்த தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 1,950 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,696 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். 254 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுதியவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு அழைப்பு கடிதத்துடன் (ஹால் டிக்கெட்), கருப்பு அல்லது நீலநிற பால்பாய்ண்ட் பேனா, தேர்வு வைத்து எழுதும் அட்டை ஆகியவற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தேர்வு மையத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையத்தை காவலர் பயிற்சி சென்னை போலீஸ் ஐ.ஜி. தமிழ்ச்செல்வன், திருச்சி போலீஸ் சூப்பிரண்டு (பட்டாலியன்-1), உமையாள், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வில் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் என ஏறத்தாழ 150 போலீசார் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்களின் வசதிக்காக நேற்று காலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

Next Story