அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி


அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி, தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தானே,

அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி, தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவன வேலை

தானே, வர்தக் நகரை சேர்ந்தவர் பல்வாந்த் ரானடே(வயது68). தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரி. இவர் வேலைதேடி ஆன்-லைனில் பல்வேறு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அவருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் அவருக்கு அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பல்வாந்த் ரானடே இ-மெயில் அனுப்பியவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக அந்த நபர் உறுதி அளித்தார். சில நாட்களில் வேலைக்கான நியமன கடிதத்தையும் அனுப்பினார்.

ரூ.38 லட்சம் மோசடி

பின்னர் அந்த நபர் மேலும் 2 பேருடன் சேர்ந்து விசா பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, பல்வாந்த் ரானடேவிடம் ரூ.38 லட்சம் வரை பறித்தார். முன்னதாக பல்வாந்த் ரானடே வேலை கிடைக்கும் என நம்பி அந்த பணத்தை ஆன்-லைனில் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். இந்தநிலையில் திடீரென அவரால் அந்த கும்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் பல்வாந்த் ரானடேக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன அவர் சம்பவம் குறித்து வர்தக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமெரிக்க நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.

Next Story