திருச்செந்தூர் அருகே காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

திருச்செந்தூர் அருகே காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித எலும்புக்கூடு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த கிருஷ்ணா நகரில் இருந்து மணக்காடு செல்லும் வழியில், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடந்தது. நேற்று மதியம் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எலும்புக்கூடு பாகங்களை நெல்லை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் டொனால்டு ரவீந்திரன் ஆய்வு செய்தார்.
போலீசார் விசாரணை
அந்த எலும்புக்கூட்டில் வேட்டி, சட்டை அணிந்த நிலையில் இருந்தது. மேலும் எலும்புக்கூட்டின் அருகில் பச்சை நிற துண்டு தனியாக கிடந்தது. எனவே இறந்து கிடந்தவர் ஆண் என்று தெரியவந்தது. எலும்புக்கூட்டின் அருகில் வெள்ளை நிற தலைமுடிகள் கிடந்தன. எனவே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் யாரேனும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்றும், அவரது உடல் பாகங்களை நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அந்த எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி, ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story