224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முடிவு


224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முடிவு
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து ஆலோசனை


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக மாநில தலைவர்களுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில், முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களுக்கு டிக்கெட் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உட்கட்சி மோதல், எந்த பிரச்சினைகளும் எழக்கூடாது என்பது தொடர்பாக கர்நாடக தலைவர்களுக்கு மேலிட தலைவர்கள் கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏப்ரல் முதல் வாரத்தில்...

காங்கிரஸ் கட்சியின் 84-வது உயர்மட்ட கலந்தாய்வு கூட்டத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அந்த தேர்தலை எதிர் கொள்ளவும், அதற்கான வியூகங்களை அமைப்பது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மதவாத சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது கட்டாயமாகும். மதவாத சக்திகளை தோற்கடிக்க அரசியல் கட்சிகள் கைகோர்த்து செயல்பட வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராக உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 224 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிற கட்சிகளில் இருந்து காங்கிரசில் சேர்ந்துள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. வெற்றி வாய்ப்புகளை ஆராய்ந்த பிறகே வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story