4 இடங்களில் போலீஸ் குறைதீர்க்கும் கூட்டம்: 238 மனுக்களுக்கு தீர்வு

மாவட்டத்தில் காளையார்கோவில் உள்பட 4 இடங்களில் போலீஸ் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 238 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,
போலீஸ் நிலையங்களில் மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு மாதம் ஒருமுறை போலீஸ் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் உட்கோட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் சிவகங்கை உட்கோட்டத்தில் காளையார்கோவிலிலும், காரைக்குடி கோட்டத்தில் காரைக்குடியிலும், திருப்பத்தூர் கோட்டத்தில் சிங்கம்புணரியிலும், தேவகோட்டை உட்கோட்டத்தில் கல்லல் என 4 இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு கண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்தந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் நாளில் மொத்தம் 268 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. அவற்றில் 238 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 30 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்த உட்கோட்ட போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story