காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் சீமான் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
தூத்துக்குடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்வதற்காக விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அய்யா வைகுண்டர் கோவில்
அய்யா வைகுண்டர் கோவிலை இந்து அறநிலையத்துறை எடுக்கும் முயற்சி நடக்கிறது. இந்த கோவிலின் வழிபாட்டு முறையே வேறு. ஆகையால் அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக செல்கிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறதா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏற்கனவே தஞ்சை பாலைவனமாக மாறி வருகிறது. தொடர்ந்து அங்கு எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை 5 ஆண்டுகளில் நீரற்ற நகரமாக அறிவிக்கப்படும்.
தூத்துக்குடி அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த போராட்டத்துக்கு நாங்கள் துணை நிற்போம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று இனிப்பான வார்த்தைகளை கூறி அனைத்து இடங்களையும் பாலைவனமாக அரசு மாற்றி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம்
மக்களின் பிரச்சினைகளை அரசு கையில் எடுக்காதபோது, மக்கள் அரசை கையில் எடுக்கும் நிலை வந்து விடும். மக்கள் விரோத அரசை தூக்கி எறிந்து விட்டு மக்களுக்கான அதிகாரம் கட்டமைக்கப்படும். தமிழ்நாடு தற்போது தலைவன் இல்லா நாடாகவும், தகப்பன் இல்லாத வீடு போன்றும் உள்ளது. மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கொடுக்கும் அழுத்தத்தை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக அரசுதான் கொடுத்திருக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் சுத்தமான தண்ணீர் இல்லை. இது மக்களுக்கான அரசு அல்ல. போராடுகிற மக்களின் கோரிக்கையை கேட்டு, அதற்கு தீர்வு காணும் அரசு அல்ல. போராட்டத்தை தள்ளிபோட்டு, அதில் இருந்து மக்களை விலகி செல்ல வைக்கும் அரசுதான் நடக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
இதையடுத்து அ.குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Related Tags :
Next Story