தங்கச்சிமடம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


தங்கச்சிமடம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2018 3:15 AM IST (Updated: 19 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

தங்கச்சிமடம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராமமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

தங்கச்சிமடம் அருகே உள்ளது வில்லூண்டி தீர்த்தம். இங்கு சுமார் 300–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலுக்குள் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடம் என்பதால் இதனை பார்ப்பதற்காக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருவது வழக்கம். ராமேசுவரத்தில் இருந்து பாம்பன் செல்லும் டவுன் பஸ் வில்லூண்டி தீர்த்தத்தில் நின்று செல்லும். ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு அங்கு நிழற்குடை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு நிழற்குடை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராமமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதி, தாலுகா செயலாளர் முருகானந்தம், பாபு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story