மேம்பாலத்தில் இருந்து காந்திபுரத்துக்கு வாகனங்கள் இறங்கும் வகையில் மாற்றம், ஆய்வுப்பணி தொடங்கியது

புதிய மேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் பகுதியில் வாகனங்கள் இறங்கும் வகையில், மேம்பாலத்தில் இறங்குதளம் அமைப்பது குறித்து ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவை நஞ்சப்பாரோட்டில் இருந்து சத்தி ரோடு ஆம்னி பஸ்நிலையம் வரை 1.7 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நஞ்சப்பாரோடு மற்றும் சரவணம்பட்டி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கிராஸ்கட்ரோடு, பாரதியார் ரோடு, 100 அடி ரோடு மற்றும் சின்னசாமி ரோட்டில் இறங்க தளம் இல்லாததால் மேம்பாலத்தை பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. இதேபோல் காந்திபுரம் பஸ்நிலையம் பகுதியில் இருந்து பஸ்கள் ஏறி, இறங்கவும் வழிகள் இல்லை. இதனால் மேம்பாலத்தில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் கீழ்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இதனால் காந்திபுரம் மேம்பாலம் பகுதியில் இருந்து இறங்குதளம் அமைக்க ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறிய தாவது:-
காந்திபுரம் மேம்பாலத்தில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும், வாகனங்கள் அதிக அளவில் சென்று வரவும் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையில் மேம்பாலங்களை வடிவமைத்து கொடுக்கும் மும்பையை சேர்ந்த டி.பி.எப். நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. காந்திபுரம் பகுதியில் இடநெருக்கடி உள்ளது. மேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் பகுதிக்கு இறங்கும் வகையில் இறங்குதளம் அமைக்க முதல்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டவரைவு தயாரிக்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யுமாறு அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதேபோல் உக்கடம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மேம்பாலத்தை போக்குவரத்து நெருக்கடி இல்லாத அளவுக்கு வடிவமைப்பு செய்ய ரூ.15 லட்சம் செலவில் திட்டவரைவு தயாரிக்கவும், மருதமலை சிக்னல் பகுதியில் மேம்பாலம் பணிக்கான திட்டவரைவுக்கு ரூ.20 லட்சம் உள்பட மொத்தம் ரூ.40 லட்சம் அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
காந்திபுரம் மேம்பாலத்துக்கு திட்டவரைவு தயாரிக்கப்பட்டு, இடம் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின்னர், திட்ட பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 100 அடி ரோட்டில் இருந்து சின்னசாமி ரோடுவரை அமைக்கப்பட்டு வரும் 2-வது கட்ட மேம்பால பணிகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. 2-வது கட்ட மேம்பாலம் 100 அடி ரோடு சிக்னல் பகுதியில் உள்ள பாலத்துக்கு மேல் கட்டப்படும்போது தரையில் இருந்து 55 அடி உயரமாக இருக்கும். தேவையான ஏற்ற இறக்கத்துடன் அமைக்கப்படுவதால் வாகன போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காந்திபுரம் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் வகையில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே காந்திபுரம் பகுதியில் இருபுறமும் பாதசாரிகள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கனவே திட்டமிட்டதை செயல்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பாதசாரிகள் சிரமத்துடன் சாலையை கடக்கும் பகுதிகளான கோவை ரெயில்நிலையம், அவினாசிரோடு கொடிசியா செல்லும் பாதை, பீளமேடு ஹோப்கல்லூரி, லட்சுமி மில் சந்திப்பு பகுதி, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story