சரக்கு வேன் டிரைவரிடம் லஞ்சம் போலீஸ்காரர் பணி இடைநீக்கம் சமூகவலைதளத்தில் வீடியோ பரவியதால் நடவடிக்கை

சரக்கு வேன் டிரைவரிடம் லஞ்சம் போலீஸ்காரர் பணி இடைநீக்கம் சமூகவலைதளத்தில் வீடியோ பரவியதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 4:36 AM IST (Updated: 28 March 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

சமூகவலைதளத்தில் வீடியோ பரவியதை அடுத்து சரக்கு வேன் டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

சமூகவலைதளத்தில் வீடியோ பரவியதை அடுத்து சரக்கு வேன் டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ பரவியது

மும்பையை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் சரக்கு வேன் டிரைவரிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ கடந்த மாதம் சமூகவலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டு மும்பை போலீசார் பக்கத்திலும் டேக் செய்யப்பட்டு இருந்தது.

முதலில் மும்பை போலீசார் அது பழைய வீடியோ என கூறினர்.

பணி இடைநீக்கம்

எனினும் பின்னர் நடந்த விசாரணை யில் வேன் டிரைவரிடம் லஞ்சம் வாங்கியது பைதோனி பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் விலாஸ் ஜாவிர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story