தியேட்டர்களுக்கு புதுப்படங்கள் தர மாட்டோம்

தியேட்டர்களுக்கு புதுப்படங்களை தரமாட்டோம் என்று வினியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் தியேட்டர்களுக்கு 25 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. செலுத்துவதால் இந்த வரியை நீக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் தியேட்டர்களை மூடினார்கள். இதனால் பொழுதுபோக்கிற்கு வேறு வழியின்றி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது கேளிக்கை வரியை குறைப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தியேட்டர்களை திறப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். ஆனால் கேளிக்கை வரி செலுத்தினால் புதுச்சேரி தியேட்டர்களுக்கு புதுப்படங்களை வழங்க இயலாது என்று தென்னாற்காடு-பாண்டி திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் சுந்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுவை மாநிலத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு கேட்டு உத்தரவு வாங்கி வரும் வரையில் புதுப்படங்களை புதுவை மாநில தியேட்டர்களுக்கு வழங்க இயலாது என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு புதிதாக மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்களை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தியேட்டர் உரிமையாளர்களுக்கு, பழைய திரைப்படங்களை மட்டுமே திரையிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story