காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம்’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி செலவில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு (கேத் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு, குறிப்பாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், இதய அறுவை சிகிச்சை, ரத்தக் குழாய் அடைப்புக்காக ஸ்டென்ட் பொருத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு கேத் லேப் அவசியமாகும். கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு இதுவரை சென்றனர்.
இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் கேத் லேப் அமைக்க சுகாதாரத் துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்து இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதேபோல அழகியல் துறை, செவி வழி பயிற்சி, கூடுதல் டயாலிசிஸ் பிரிவு ஆகியவையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். புதிய கருவிகளை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரதுறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதயவியல் சிகிச்சை பிரிவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு, ரூ.5 கோடி செலவில் புதிய கருவிகள் அந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய குழாயில் ஸ்டென்ட் வைப்பது போன்ற சிகிச்சைகள் இனி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யலாம். மேலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் டயாலிசிஸ் செய்து கொள்ள ஏற்கனவே 10 எந்திரங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 5 எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு எந்திரத்தின் மூலம் தினமும் 3 பேர் வீதம் மொத்தம் 45 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படும். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் எந்திரம் வழங்க சுகாதார துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்-அமைச்சர் தலைமையில் முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டாயம் அமைக்காமல் விடமாட்டோம். இதற்காக நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து முடக்கி உள்ளனர். தற்போது சட்ட போராட்டத்தை தொடர்ந்துள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு 14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. வினால் தான் இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story