காவிரி நீர் பங்கீட்டில் இறுதி தீர்ப்பை கர்நாடகம் பின்பற்றும்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு எதிர்க்கிறது. அதேவேளையில் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் செயல்படும்” என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்குவதால் மாநிலத்தில் பிரசார களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா 5 நாட்கள் சுற்றுப்பயணமாக அவருடைய சொந்த மாவட்டமான மைசூருவுக்கு வந்துள்ளார்.
தான் வேட்பாளராக போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் உள்ள 22 கிராமங்களுக்கும் நேற்று பிரசார வாகனத்தில் சென்ற சித்தராமையாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். இதையடுத்து மக்கள் மத்தியில் பேசிய சித்தராமையா கூறியதாவது.
“எனக்கு(சித்தராமையா) அரசியல் பிரவேசம் தந்தது இந்த சாமுண்டீஸ்வரி தொகுதி தான். மறுஜென்மம் கொடுத்ததும் இதே தொகுதி மக்கள் தான்.
இது என்னுடைய கடைசி தேர்தல். அதை இந்த சாமுண்டீஸ்வரி தொகுதியிலேயே முடித்துக் கொள்ள முடிவு செய்து உள்ளேன். அதனால் வருகிற சட்டசபை தேர்தலிலும் எனக்கு ஓட்டுப்போட்டு வெற்றி அடைய செய்ய வேண்டும்.”
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
“காவிரி பிரச்சினையில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வதில் மட்டும் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் செயல்படும். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி பிரச்சினைக்காக வருகிற 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த சில கட்சிகள் திட்டமிட்டு அழைப்பு விடுத்து வருகின்றன. இது தமிழ்நாட்டின் உள்விவகாரம். இதில் கர்நாடகம் செவிசாய்க்க ஒன்றும் இல்லை.
குறிப்பாக தி.மு.க. தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும், காவிரி மேற்பார்வை குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாட்டில் முழுஅடைப்பு போராட்டம் நடக்கும் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு காவிரி பிரச்சினையில் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது அவர்களின் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு காவிரி நதிநீரை கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் எந்த அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று வரையறை வகுத்து இறுதி தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு யாரும் வழக்கு தொடர முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரி சித்தராமையா சுற்றுப்பயணம் செய்த கிராமங்களில் பொதுமக்கள் மேளதாளங்களுடன் அவரை வரவேற்றனர். முதல்-மந்திரி சுற்றுப்பயணத்தையொட்டி அவர் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும், வீட்டு மாடியின் மீதும் நின்று கையசைத்தனர். அவர்களுக்கு சித்தராமையா மகிழ்ச்சி பொங்க வணக்கம் தெரிவித்தார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஊட்டஹள்ளி, இனகல், இலவாலா, கே.எச்.பி.காலனி, கேர்ஹள்ளி உள்பட பல கிராமங்களுக்கு சாலை மார்க்கமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். ஊட்டஹள்ளிக்கு வந்த சித்தராமையாவுக்கு 750 கிலோ ஆப்பிள் மாலையை கிரேன் எந்திரம் மூலம் தொண்டர்கள் அணிவித்தனர். தொண்டர்களின் இந்த வரவேற்புக்கு சித்தராமையா மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Tags :
Next Story