காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.- கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.- கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரூரில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

அரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து, வருகிற 5-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரூரில்நேற்று தி.மு.க.- கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், கிருஷ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாக்கன் சர்மா, ராமச்சந்திரன், ம.தி.மு.க. நிர்வாகிகள் ராஜா, சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிசுபாலன், மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அல்லிமுத்து, தமிழ்குமரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story