காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயன்ற 22 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, திண்டுக்கல் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திண்டுக்கல்லில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் பாண்டியன், இணைச்செயலாளர்கள் பாலுச்சாமி, மணி உள்பட 22 பேர் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின்னர், திண்டுக்கல் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்த அவர்கள் பூட்டுப்போட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 22 பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் களை போலீஸ் வேனில் ஏற்றி பழனி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பாண்டியன், தமிழர் தேசிய முன்னணி மாநில துணை தலைவர் வீரப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ரவணா, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜூ, தலித் சிறுபான்மையினர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்பட 16 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதையடுத்து, திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனே 16 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் ரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story